தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற சபாநாயகர் பதவியேற்பு விழாவில், அரசியல் ஆச்சரியங்களைத் தாண்டி அரங்கேறிய ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஒட்டுமொத்த அவையையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

புதிய சபாநாயகராகத் தேர்வு செய்யப்பட்ட ஜே.சி.டி.பிரபாகரை, மரபுப்படி அவை முன்னவர் கே.ஏ.செங்கோட்டையன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் கைகோர்த்து அழைத்துச் சென்று அவரது இருக்கையில் அமர வைத்தனர்.

இந்த நடைமுறை முடிந்ததும், தனது இருக்கைக்குத் திரும்பிய உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் விஜய் அமர்ந்திருந்த திசையைப் பார்த்து மிகுந்த மரியாதையுடன் வணக்கம் தெரிவித்தார். இதற்குப் பதில் மரியாதையாக முதலமைச்சர் விஜய்யும் புன்னகையுடன் கைகூப்பி வணக்கம் தெரிவிக்க, தமிழக அரசியலின் இரு பெரும் இளம் துருவங்களும் காட்டிய இந்தப் பண்பு அங்கிருந்தோரை நெகிழ வைத்தது. “தேர்தல் களத்தில் மோதிக்கொண்டாலும், சபைக்குள் இதுதான்யா உண்மையான அரசியல் நாகரிகம்” எனப் பலரும் இந்த வீடியோவைப் பகிர்ந்து சமூக வலைதளங்களில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

“>