
தெலுங்கானா அமைச்சர் கொண்டா சுரேகா நடிகை சமந்தா மற்றும் நடிகர் நாக சைதன்யா விவாகரத்து பெற்று பிரிந்ததற்கு முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் மகனும் முன்னாள் அமைச்சருமான கேடி ராமராவ் தான் காரணம் என்று கூறினார். இந்த சம்பவம் சர்ச்சையாக மாறிய நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் கேடி ராமராவ் அமைச்சர் மீது அவதூறு வழக்கு தொடர்வதாக தெரிவித்தார். நாகார்ஜுனா அமைச்சர் மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த விவகாரத்தில் சமந்தா விடம் மன்னிப்பு கேட்ட அமைச்சர் கே டி ராமராவ் விஷயத்தில் பின்வாங்க மாட்டேன் என்று கூறிவிட்டார். இந்நிலையில் தற்போது அமைச்சர் கொண்டா சுரேகா சந்திரசேகர் ராவ் எங்கே என்று சந்தேகம் கிளப்பியுள்ளார். அவர் சந்திரசேகர் ராவ் காணாமல் போனதற்கு கேடி ராமராவ் தான் காரணம் என்று கூறியதோடு சந்திரசேகர் ராவ் தொகுதியான கஜ்வேலி பகுதிக்கு சென்று தங்கள் தொகுதி சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை என வழக்கு தொடருமாறு கூறியுள்ளார். மேலும் சந்திரசேகர் ராவ் பொதுவெளியில் வராததற்கு கேடி ராமராவ் தான் காரணம் என்று அவர் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளது தெலுங்கானா அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.