
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் ஊடகத்தில் செய்தி வெளியானதால் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க காவல் ஆணையர் பேட்டி கொடுத்தார். அதற்கு அரசு அனுமதி பெற வேண்டியதில்லை. இதுபோன்ற சமயங்களில் காவல்துறை அதிகாரி பேட்டியளிப்பது வழக்கம். இதுவரை நடந்த விசாரணையில் ஒருவர் மட்டுமே குற்றவாளி என தெரியவந்துள்ளதாக தான் காவல் ஆணையர் தெரிவித்தார். ஒருவர் மட்டும் குற்றவாளி என அவர் எந்த முடிவுக்கு வரவில்லை என சென்னை ஐகோர்ட்டில் அரசு தலைமை வழக்கறிஞர் வாதிட்டார்.