திருச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு குற்ற செயல்களை தடுப்பதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு காவல்துறையினர் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் 16-ஆம் தேதி முதல் 8 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு பல்வேறு லட்சம் மதிப்பிலான குட்கா, கஞ்சா, கள் மற்றும் மதுபான வகைகள் போன்றவைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு மணல் கடத்தல் மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தல் போன்ற குற்றசாட்டுகளுக்காக 26 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்காக பல்வேறு கட்சியினர் மீது 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு 12,723 வாகன விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதோடு, ரூ.1,23,64,500 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட எஸ்பி வருண் குமார் தலைமையில் தேர்தல் பாதுகாப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான புகார்களை 9487464651 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு 24 மணி நேரமும் தெரிவிக்கலாம்.