இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரின் வீடு மும்பையில் உள்ளது. இங்கு பாதுகாப்பு காவலராக பிரகாஷ் கோவிந்த் கபாடே  (39) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு மாநில போலிஸ் ரிசர்வ் படையில் சேர்ந்த நிலையில் கடந்த வருடம் சச்சின் டெண்டுல்கர் வீட்டில் பாதுகாப்பு காவலராக நியமிக்கப்பட்டார்.

இவர் கடந்த வாரம் தன்னுடைய சொந்த ஊரான ஜாம்நகர் பகுதிக்கு சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று காலை அவர் பயன்படுத்தக்கூடிய கை துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். மேலும் அவருடைய தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.