கௌரவ டாக்டர் பட்டம் வழங்குவதை நிறுத்த வேண்டும் என எம்.பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார். இந்த பட்டம் பெறுபவர்கள் தங்களது பெயருக்கு முன் Dr என பயன்படுத்துவதையும் தடுக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கேட்டுக் கொண்டார்.

தமிழ் சினிமாவில் இதுவரை எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், கமல்ஹாசன், விஜயகாந்த், விஜய், விக்ரம், விவேக், சிம்பு, வடிவேலு, தேவா, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பலருக்கு கௌரவ டாக்டர் மற்றும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும். சமீபத்தில் இயக்குனர் அட்லீக்கு சத்யபாமா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தது.