
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் கிருஷ்ணகுமார் சங்கீதா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் கிருஷ்ணகுமார் தன்னுடைய மனைவி சங்கீதாவை நேற்று காலை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். பின்னர் அவர் தன்னுடைய சொந்த ஊரான கேரள மாநிலம் பாலக்கோடு மாவட்டத்தில் உள்ள வண்டாழி ஈரட்டுக்குளம் என்ற இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு தன்னுடைய வீட்டின் முன்பாக அவர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இதில் சங்கீதா ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்த நிலையில் இவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள்.
அவர்களின் மகள்கள் இருவரும் கல்லூரிக்கு சென்ற போது தான் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. மேலும் இருவரின் சடலங்களையும் மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தன் மனைவியின் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை சுட்டு கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .