சென்னை உயர்நீதிமன்றத்தில் கோபிகிருஷ்ணன் என்பவர் சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் தொடர்பாக ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தமிழகத்தில் சட்டவிரோதமான முறையில் செயல்படும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு திட்டவட்டமாக கூறியது.

இதனையடுத்து நீதிபதிகள் கோவையில் சட்ட விரோதமான முறையில் செயல்படும் கல்குவாரிகளில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுகிறதா என்று தமிழக அரசிடம் கேள்வி எழுப்பினர். மேலும் இது தொடர்பாக உரிய முறையில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை இரண்டு வார காலத்திற்கு தள்ளி வைத்தனர்.