தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றபிறகு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பற்றிய பேச்சு தான் மிகவும் பரபரப்பாக இருந்தது. ஏனெனில் முக்கியமான துறையான நிதித்துறை யாருக்கு ஒதுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் வெளிநாடுகளில் படித்து பல முக்கிய நிறுவனங்களில் பணியாற்றிய பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு அத்துறை ஒதுக்கப்பட்டது பரபரப்பாக பேசப்பட்டது. அதன் பிறகு திமுகவில் தற்போது ஹாட் டாப்பிக்காக பேசப்படும் அமைச்சர்களில் செந்தில் பாலாஜி தான் முதலிடத்தில் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. அண்மையில் ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் உங்களுக்கு வெற்றி ஈரோடு கிழக்கில் கிடைக்குமா என்று கேட்டதற்கு என் பக்கம் செந்தில் பாலாஜி இருக்கிறார் என்று தெரிவித்தார்.

இதிலிருந்தே கொங்கு மண்டலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நல்ல செல்வாக்கு இருப்பது தெரிய வருகிறது. கடந்த காலங்களில் அதிமுகவில் இருந்த போது திமுகவை கடுமையாக விமர்சித்தவர்களில் அமைச்சர் செந்தில் பாலாஜியும் ஒருவர். ஆனால் தற்போது முதல்வரின் மனதில் இடம் பிடித்து அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் எந்த வேலை கொடுத்தாலும் அதை கச்சிதமாக சிறப்பாக செய்து முடித்து விடுவார் என்ற அளவுக்கு பெயரெடுத்துள்ளார். உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற நிலையில் அடுத்த முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தான் என்றும் துணை முதல்வராக அவருடன் படித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தான் என்றும் திமுக வட்டாரங்கள் கூறிவரும் நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று பரபரப்பாக பேசப்படுகிறது.

அதாவது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தான் அடுத்த முதல்வராகும் வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் பலரும் கூறுகிறார்கள். மேலும் தமிழகத்தின் முதல்வர் என்ற பதவி மேல் யாருக்கு தான் ஆசை இருக்காது. அமைச்சர் செந்தில் பாலாஜியும் முதல்வர் பதவியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் தான் காய்களை நகர்த்தி முதல்வர் மனதில் இடம் பிடித்து சிறப்பான முறையில் பணி செய்து வருவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. ஆனால் அதெல்லாம் உண்மையாக இருக்காது என்றும் சிலர் கூறுகிறார்கள்.