
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் ஹூலிக்கட்டி கிராமத்தில் புகழ்பெற்ற பைரேஸ்வர் கரீம்மா தேவி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் வருடாந்திர உற்சவ திருவிழாவின்போது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதை சாப்பிட்ட சிலருக்கு திடீரென வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது.
இந்த பிரசாதத்தை சாப்பிட்டதால் 51 பேருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் அவர்கள் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில் 5 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்..