கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கண்ணமலை பகுதியில் அஸ்கர் (19) என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களான சல்மான் (19), மகேஷ் (19), சைஹானுதீன் (19) ஆகியோருடன் சேர்ந்து கண்ணமலை வனப்பகுதிக்கு சென்றுள்ளார். அவர்கள் மலை உச்சியில் உள்ள காட்சி முனைக்கு சென்ற நிலையில் திடீரென கடும் பனிமூட்டம் சூழ்ந்துள்ளது. தற்போது அங்கு மழை பெய்து வருவதால் மழை ஏற வனத்துறை தடை விதித்துள்ளது. இந்த தடையை மீறி வாலிபர்கள் மலை உச்சிக்கு சென்ற நிலையில் பனிமூட்டம் காரணமாக அங்கு மாட்டிக்கொண்டனர்.

உடனடியாக அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததோடு தாங்கள் இருக்கும் இடத்தில் லொகேஷனையும் அனுப்பினர். இதைத்தொடர்ந்து உடனடியாக காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அவர்கள் அப்பகுதி மக்களுடன் சேர்ந்து நேற்று முன்தினம் இரவு மலைப்பகுதியை அடைந்த நிலையில் வாலிபர்களை மீட்டு கீழே பத்திரமாக அழைத்து வந்தனர். அவர்களுக்கு மருத்துவமனையில் முதலுதவி வழங்கப்பட்ட நிலையில் வனத்துறையினர் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.