ஐபிஎல் முதல் ஆட்டத்திலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது அசாத்தியமான ஃபீல்டிங் மூலம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக, ஆர்சிபி-க்காக அறிமுகமான ஃபில் சால்ட், மைதானத்தில் சிறுத்தை போல பாய்ந்து எடுத்த இரண்டு கேட்சுகள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஒரு பக்கம் அனுபவ வீரர் விராட் கோலி ஒரு எளிய கேட்சை நழுவவிட்டு அதிர்ச்சி கொடுத்த நிலையில், மறுபக்கம் ஃபில் சால்ட் தனது உயிரைக் கொடுத்துப் பாய்ந்து எடுத்த கேட்சைப் பார்த்த ரசிகர்கள், “இது என்ன மனுஷன் கையா இல்ல காந்தமா?” என ஆச்சரியத்தில் கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர்.

​குறிப்பாக 16-வது ஓவரில், சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷன் அடித்த பந்தை, பவுண்டரி லைனில் ஃபில் சால்ட் அந்தரத்தில் பறந்து பிடிதது ஒட்டுமொத்த ஸ்டேடியத்தையே ஒரு நிமிடம் மூச்சுப் பேச்சில்லாமல் ஆக்கியது. இதற்கு முன்பே 13-வது ஓவரிலும் ஹென்ரி கிளாசென் கொடுத்த கடினமான வாய்ப்பை கச்சிதமாகப் பிடித்து அசத்தியிருந்தார்.

“கோலியே தப்பு பண்ணாலும், இந்த சால்ட் இன்னைக்கு வேற மோடுல இருக்காரு பாஸ்!” என நெட்டிசன்கள் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர். ஹைதராபாத் அணி 201 ரன்கள் குவித்து ஆர்சிபி-க்கு கடினமான இலக்கை நிர்ணயித்திருந்தாலும், ஃபில் சால்ட்டின் இந்த மிரட்டலான ஃபீல்டிங் தான் தற்போதைய ஹாட் டாபிக்!