தமிழக முதல்வர் ஸ்டாலின் கோட்டையில் நடைபெறும் துறை வாரியான ஆலோசனை கூட்டத்தில்  அரசு செயல்படுத்தும் திட்டங்கள் மற்றும் மக்களுக்கான திட்டங்கள் போன்றவற்றில் சுனக்கம் ஏற்படக் கூடாது என அடிக்கடி வலியுறுத்தி வருகிறார். முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றதும் முக்கிய நபர்களுக்கு அமைச்சரவையில் பொறுப்பு கொடுத்தார். அந்த வகையில் தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவருக்கும் அமைச்சர் பதவி வழங்கப்பட்ட நிலையில், அந்த அமைச்சர் தலைமையின் குடும்பத்தில் ஒருவராக கருதப்படுகிறார்.

இவரின் துறையில் தற்போது ஒரு புகார் எழுந்துள்ளது. அதாவது அந்த அமைச்சரின் பிஏ என்று சொல்லிக் கொள்ளும் ஒருவர் பல நபர்களிடம் பணத்தை கறந்துள்ளாராம். இந்த விவகாரம் அமைச்சருக்கு தெரிந்து பல மாதங்கள் ஆகியும் இதுவரை அந்த நபரின் மீது நடவடிக்கை எடுக்காததோடு அவர் மீது நடவடிக்கை எடுத்தால் தனக்கு எதிராக திரும்பி விடுவாரோ என்ற எண்ணத்தில் முதல்வர் காதுகளுக்கு விவரத்தை தெரிவித்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

ஒரு அலுவலக ஊழியர் மீது கூட நடவடிக்கை எடுப்பதற்கு அமைச்சர் பயப்படுகிறாரா என்று தற்போது கேள்வி எழுந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் அலுவலக உதவியாளர் மீது மட்டும்  நடவடிக்கை எடுக்கப் போகிறாரா அல்லது அமைச்சர் மீதும் சேர்ந்து நடவடிக்கை எடுக்கப் போகிறாரா என்று தற்போது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அமைச்சர்கள் அனைவரும் சரியான முறையில் செயல்பட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி வரும் நிலையில் தற்போது ஒரு முக்கிய அமைச்சரின் துறையில் புகார் வந்திருப்பதால் முதல்வர் ஸ்டாலின் மிகுந்த டென்ஷனில் இருப்பதாகவும் கட்டாயமாக அதிரடி நடவடிக்கையை எடுப்பார் எனவும் கோட்டை வட்டாரங்கள் தெரிவிக்கிறது.