இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சேலத்தில் உள்ள நெத்திமேடு மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் முதல்வர் ஸ்டாலினின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாணவர்களிடம் உணவின் தரம் மற்றும் சுவை குறித்த உதயநிதி ஸ்டாலின் கேட்டறிந்ததோடு சமையல் கூடத்தில் உள்ள உணவுப் பொருட்களின் இருப்பு மற்றும் பதிவேடுகள் குறித்து ஆய்வு செய்தார். அதன் பிறகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை சாப்பிட்டார்.

அதன் பிறகு பள்ளிகளின் கழிவறை போன்றவற்றையும் ஆய்வு செய்து சுத்தமாக வைத்திருக்க அறிவுறுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வரின் காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்தேன். காலை உணவு திட்டத்தினால் மாணவர்கள் பள்ளிக்கு வருவது அதிகரித்துள்ளது. மேலும் காலை உணவு திட்டத்தின் மூலம் மாணவர்கள் பள்ளிக்கு காலை சீக்கிரமாக வருகிறார்கள் என்று கூறினார் ‌