
ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூர் மாவட்டத்தில் கூலி தொழிலாளி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். வேலைக்கு செல்லும்போது தம்பதியினர் தங்களது மகளை அக்கம் பக்கத்தினரின் பராமரிப்பில் விட்டுச் செல்வது வழக்கம். கடந்த 22-ஆம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது மோகன் என்பவர் சாக்லேட் வாங்கி தருவதாக கூறி சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது சிறுமி கதறி அழுததால் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
அதற்குள் மோகன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் மோகனை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். மோகன் ஏற்கனவே தனது மனைவியின் தங்கையையும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. அப்படி இருக்கும்போது மோகன் 3 வயது சிறுமியிடமும் அத்துமீறியது உறுதியானது. அவரை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.