
சிறு குழந்தை முதல் வயதான பெரியவர் வரை செல்போன் உபயோகப்படுத்துகின்றனர். இன்றைய காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோசியல் மீடியாவில் இளம்தலைமுறையினர் மூழ்கி கிடக்கின்றனர். பாட்டு பாடுவது, டான்ஸ் ஆடுவது, சமையல் செய்வது, அழகு குறிப்பு சொல்வது மட்டுமில்லாமல் ரிஸ்க்கான செயல்களையும் செய்து அதனை வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவிடுகின்றனர்.
எல்லை மீறி செய்யும் செயல்கள் அவ்வபோது உயிருக்கே கூட ஆபத்தை விளைவிக்கிறது. இந்நிலையில் கொல்கத்தாவின் பரபரப்பான சாலையில் சிக்னலுக்காக வாகன ஓட்டிகள் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென வந்த இளம் பெண்கள் சினிமா பாடலுக்கு நடனம் ஆடியுள்ளனர். இது தொடர்பான காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.