திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டித் தீர்ப்பதால் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்நிலையில் மேல் மலை கிராம சாலைகளில் ஒரு சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் முறிந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கொடைக்கானலில் இருந்து வானியல் ஆய்வு மையம் செல்லும் சாலையில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

மேலும் மழை விட்டு விட்டு பெய்வதால் சீரமைப்பு பணியை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் கொடைக்கானல் கீழ் மழை பகுதியான பெரும்பாரை, பண்ணைக்காடு, குப்பம்மாள் பட்டி உள்ளிட்ட சில பகுதிகளில் கனமழை பெறுவதால் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு மரக்கிளைகள் விழுந்தது. மேலும் அந்த பகுதியில் இருக்கும் ஐந்து மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்து விழுந்ததால் மின் வினியோகம் தடைபட்டது.