
இளையான்குடி அடுத்த வடக்கு சாலைகிராமம் பகுதியில் அண்ணன், தம்பி வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பாதை பிரச்சனை காரணமாக அண்ணனுக்கும் தம்பிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. சம்பவம் நடைபெற்ற அன்று தம்பியின் மனைவி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கணவரின் அண்ணன் அரிவாளை எடுத்து விரட்டி உனக்கு இங்கு பாதை இருக்கிறதா? என கேட்டு தகராறு செய்துள்ளார். மேலும் கோபத்தில் தனது தம்பி மனைவியின் உதட்டை கொடூரமாக கடித்து குதறியுள்ளார்.
இதனால் ரத்தம் சொட்ட சொட்ட அந்த பெண் பரிதவித்தார். உடனே அக்கம் பக்கத்தினர் ஆம்புலன்ஸுக்கு போன் செய்து வரவழைத்தனர். அவர்கள் வந்து பெண்ணுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். தற்போது அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் புகார் அளித்து மூன்று நாட்களாகியும், போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.