வேலையை விட்டு நிறுத்தியதன் காரணமாக தன்னுடைய சம்பள பாக்கி கேட்ட மேனேஜர் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரை தன்னுடைய செருப்பை வாயால் கவி கொண்டு வர செய்த பெண் தொழிலதிபர் ஒருவரை கைது செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். அதாவது குஜராத் மாநிலம் மோர்பி மாவட்டத்தில் அமைந்துள்ளது. ரனிவா நிறுவனம் டைல்ஸ் தயாரிக்கும் இந்த நிறுவனத்தின் தலைவர் விபூதி படேல். இவருடைய நிறுவனத்தில் சேல்ஸ் மேனேஜராக பணிபுரிந்து வந்த 28 வயது இளைஞர் எந்த காரணமும் இல்லாமல் சில தினங்களுக்கு முன்பாக வேலை விட்டு நிறுத்தப்பட்டுள்ளார்.

இதனையடுத்து அவர் அதற்கு முந்தைய மாதத்திற்கான சம்பளத்தை  கேட்கும்போது எவ்வளவு தைரியம் இருந்தால் என்னிடம் வந்து பேசுவாய் என்று கூறி அடியாட்களை கூப்பிட்டு அவரை கொடூரமாக தாக்கி உள்ளார். மேலும் தலித் சமூகத்தை கூறி திட்டி அவரை பெல்டால் முதுகில் படு பயங்கரமாக தாக்கியிருக்கிறார். விபூதி படேல் இதில் அவருடைய முதுகு தோள்கள் பிரிந்து வந்துள்ளன. மேலும் அவரை தன்னுடைய காலனியை வாயால் கவி கொண்டு வருமாறு அதை நாக்கால் சுத்தம் செய்யுமாறும் செய்துள்ளார் .இந்த நிலையில் தனக்கு நேர்ந்த கொடூரங்கள் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  இதனை அடுத்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் காவல்துறையினர். மேலும் அவரை விரைவில் கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்து வருகிறது.