ஸ்பேஸ்எக்ஸ் அதன் ஸ்டார்ஷிப் வளர்ச்சியில் வேகமாக முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு விமானமும் முக்கியமான தரவு மற்றும் நிபுணத்துவத்தை கொடுக்கிறது. இந்த நிறுவனம் ஸ்டார்ஷிப்பின் முழு மறுபயன்பாட்டை அடைவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது,  இந்நிலையில்  ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் விண்ணில் பாய்ந்த போது ஒன்பது பறவைகளின் கூடுகள் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது.

எனவே  இந்த செய்திக்கு எலான் மஸ்க் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். அதாவது  இந்த கொடூரத்திற்கு பிராயச்சித்தம் தேட ஒரு வாரத்திற்கு ஆம்லெட் சாப்பிட போவதில்லை என்று   பதிவிட்டுள்ளார். இந்த பதிவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.