கேரளா மாநிலம் பட்டினம் திட்டம் மாவட்டம் வெட்டிப்பிடம் பகுதியில் ஷியாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்கள் சுமார் 50 பேருடன் 20 கார்களில் ஊர்வலமாக சென்றுள்ளனர். அதன் பிறகு செயின்ட் பீட்டர்ஸ் சந்திப்பில் இரவு நேரம் காரை சாலையின் நடுவில் நிறுத்தி பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். ஷியாஸ் 3- வது முறையாக இப்படி தனது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. இதனால் போலீசார் ஷியாசை கைது செய்தனர்.