தமிழக அரசு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு  மலிவு விலையில் உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இப்போது அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை கிலோ 25க்கும், துவரம்பருப்பு பாமாயில் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்பொழுது பண்டிகை காலம்  நெருங்குவதால்  அக்டோபர் நவம்பர் மாதங்களில் இலவசமாகவே வழங்க அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.  இந்நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் ரேஷன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் கட்டாயம் கை ரேகை வைக்க வேண்டும்.

இல்லையென்றால் ரேஷன் அட்டை ரத்து செய்வதோடு, பொருட்களும் வழங்கப்படாது என்று கடந்த சில நாட்களாக தகவல் பரவியது. இதற்கு பதிலளித்த அமைச்சர் சக்கரபாணி, கைரேகை பதிவு செய்யாவிட்டால் குடும்ப அட்டை ரத்து செய்யப்படாது; வழக்கம்போல் பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.