மகாராஷ்டிரா மாநிலத்தில் தந்தையும், மகனும் கை கொடுத்தபடி ரயிலில் முன்பு படுத்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்துள்ளது. நேற்று முன்தினம் காலை 10 மணி அளவில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத பிளாட்பார்ம் ஒன்றில் நடந்து சென்று ரயில்வே ட்ராக்கில் இறங்கி ரயில் வந்து கொண்டிருக்கும் பொழுது மற்றொரு ட்ராக்கிற்க்கு மாறி கைகோர்த்தபடி தந்தையும், மகனும் ரயிலின் முன்பே கீழே அமர்ந்துள்ளார்கள்.

மிகவும் அருகில் இருந்ததால் நிறுத்த முடியாததால் ரயில் அவர்கள் மீது ஏறி உள்ளது. இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த காட்சியானது அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது .மனதை உருக்கும் அந்த காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தந்தை மகனின்  தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தற்கொலை எதற்குமே தீர்வாகாது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டி உள்ளது. தற்கொலை எண்ணத்தில் இருந்து விடுபட உதவி எண்களை அழைக்கலாம்.