தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது ரயான் என்னும் படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்த படம் ஏஆர் ரகுமான் இசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பாலா முரளி, வரலட்சுமி சரத்குமார், பிரகாஷ் ராஜ் போன்ற பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இதையடுத்து இந்த படம் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திரையரங்கில் வெளியானது. தற்போது இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அதிகமான வரவேற்பை பெற்றுள்ளது.

இதைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் அவரது பிறந்த நாளை நேற்று கொண்டாடியுள்ள நிலையில் இன்று அவர் தனது 2 மகன்களுடன் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இன்று ஆடி கிருத்திகையை முன்னிட்டு திருவண்ணாமலையில் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கோவிலில் அருணாச்சலேஸ்வரரை தரிசிப்பதற்காக பக்தர்கள் அங்கு அதிக அளவில் கூடி வருகிறார்கள். மேலும்  நடிகர் தனுஷ் கையில் உத்திராட்ச மாலையுடன் அங்கு வழிபாட்டில் ஈடுபட்டுள்ளார்.