கிருஷ்ணகிரியை சேர்ந்த கீர்த்தி வர்மா 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண் பெற்றுள்ளார். பிளஸ் 2 தேர்வில் சாதித்த இரு கைகளும் இல்லாத மாற்றுத் திறனாளி மாணவன் கீர்த்தி வர்மாவுக்கு, முதலமைச்சர் உத்தரவின்படி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது தொடர்பாக சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில், மூளைச்சாவு அடைந்த ஒருவரின் கைகளை மாணவனுக்கு பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனை, கை மாற்று அறுவை சிகிச்சையில் சிறப்பாக செயல்படுவதால், அங்கு மாணவனின் பெயர் சேர்க்கப்பட்டு, வரும் திங்கள் முதல் மருத்துவ பரிசோதனைகள் தொடங்கும் என அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் மாணவன் சென்னையில் தங்கிப் படிக்க தேவையான வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.