தவெக தலைவர் விஜய்யை விமர்சித்து அதிமுக தரப்பிலிருந்து வெளிவந்துள்ள இந்தப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் அனலைக் கிளப்பியுள்ளது. தன் திரைப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக, அன்றைய முதலமைச்சர் வீட்டின் முன்பு விஜய் 5 மணி நேரம் கைகட்டி காத்துக் கிடந்ததைச் சுட்டிக்காட்டி அதிமுகவினர் கடுமையாகச் சாடியுள்ளனர். அன்று மண்டியிட்டு நின்ற அந்தச் சம்பவமே இன்று அவர் மேடையில் பேசுவதெல்லாம் வெறும் “நடிப்பு” என்பதை உறுதிப்படுத்துவதாக அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதிமுகவை ‘அடிமை’ என்று விமர்சித்த விஜய்க்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, இந்த “வீர வரலாறு எங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டு அதிமுகவினர் அந்த பழைய ரணத்தைத் தோண்டி எடுத்துள்ளனர். மேடையில் வீர வசனம் பேசுவதற்கும், நிஜத்தில் அதிகாரத்தின் முன் மண்டியிடுவதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்று அவர்கள் விமர்சித்துள்ளனர்.
