
நாடு முழுவதும் ஒவ்வொரு மாதமும் தொடக்கத்தில் மத்திய அரசு பல முக்கிய மாற்றங்களை அமல்படுத்தி வருகிறது. அதில் நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய வகையிலும், சில சிரமம் அளிக்கக் கூடிய வகையிலும் இருக்கும். இதன் காரணமாக மாதாந்திர மாற்றங்களை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அதன்படி இந்த மே மாதத்தில் நடந்துள்ள மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.
கேஸ் சிலிண்டர் விலை:
19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 171 ரூபாய் குறைந்து ரூ.2,021 ஆக உள்ளது. வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை எந்தவித மாற்றமும் இல்லாமல் உள்ளது.
ATM கட்டணம்:
பஞ்சாப் நேஷனல் வங்கியின் வாடிக்கையாளர்கள் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது அக்கவுண்டில் பணம் இல்லாமல் பரிவர்த்தனை கேன்சல் ஆனால் அதற்கு பத்து ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியூச்சுவல் ஃபண்ட்:
மியூச்சுவல் பண்டுகளில் இ-வாலெட் மூலமாக பணம் செலுத்தும் நபர்கள் கட்டாயம் தங்களின் கேஒய்சி செயல்பாட்டை முடித்திருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களின் பரிவர்த்தனையை தொடர முடியாது என SEBI தெரிவித்துள்ளது.
E-INVOICE:
நாட்டில் உள்ள பெரிய தொழில் நிறுவனங்கள் தங்களின் நிறுவனம் மூலமாக ஒரு வருடத்திற்கு 100 கோடி ரூபாய் மேல் turnover செய்யும்போது இன்வாய்ஸ் ரிஜிஸ்டர் போர்டலில் தங்களது எலக்ட்ரானிக் இன்வாய்ஸ் என்ன செய்ய வேண்டும்.
முதலீட்டுக்கான விளம்பரம்:
முதலீட்டு ஆலோசகர்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வாளர் போன்ற விளம்பரங்களில் கட்டாயமாக முறையான பெயர், லோகோ மற்றும் ரிஜிஸ்ட்ரேஷன் அட்ரஸ், போன் நம்பர் உள்ளிட்ட தகவல்கள் இடம் பெற்றிருக்க வேண்டும்.
வெளிநாட்டு கல்வி:
அமெரிக்காவிற்கு மாணவர்கள் விசாவில் செல்லும்போது இனி அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும். அதாவது 2,045 ரூபாய் அதிகரித்து தற்போது 15 ஆயிரத்து 135 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் இந்திய மாணவர்களுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளது.
மெட்ரோ கட்டணம் குறைப்பு:
மும்பை மெட்ரோ ரயில் நிர்வாக மே 1ம் தேதி முதல் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள், 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு 25% கட்டண குறைப்பு செய்வதாக அறிவித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தகுந்த சான்றிதழ்களை அளிக்க வேண்டும்.