
கேரள மாநிலத்தில் உள்ள பத்தினம்திட்டாவை அருகே உள்ள அடூர் பகுதியில் தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் தேதி இரவு அந்தப் பெற்றோர்களின் மகன் திடீரென தனது பெற்றோர்களையும், சகோதரியையும் வீட்டிற்குள் வைத்து வீட்டின் வெளியே பூட்டி உள்ளார். அதன் பின் வீட்டிற்கு வெளியே உள்ள மற்றொரு வீட்டில் உள்ள சமையல் எரிவாயுவை எடுத்து வந்து அதன் பைப்பை வீட்டிற்குள் வைத்து சிலிண்டரை திறந்து வைத்து வீட்டில் உள்ளவர்களை மிரட்டி உள்ளார்.
வீடு முழுவதும் சிலிண்டர் எரிவாயு பரவி உள்ள நிலையில் வீட்டில் உள்ளவர்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதன் பெயரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல்துறையினர் அந்த இளைஞரை பிடித்து வீட்டில் உள்ளவர்களை காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அந்த இளைஞர் அருகில் இருந்த கற்களை கொண்டு எரிந்து காவல்துறையினரை தாக்கியுள்ளார். இருந்த போதும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு அந்த இளைஞரை மடக்கி பிடித்து உள்ளனர்.
பின்னர் சமையல் எரிவாயுவை எடுத்து வீட்டில் உள்ள அனைவரையும் மீட்டுள்ளனர். இதுகுறித்து குடும்பத்தில் உள்ளவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் அந்த இளைஞர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரிய வந்ததால் எந்த ஒரு வழக்கு பதிவும் செய்யாமல் குடும்பத்தினருக்கு எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளனர். குடும்பத்தினரை கொலை செய்ய முயன்ற இளைஞர் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.