கேரள மாநில சிபிஐ செயலாளர் கானம் ராஜேந்திரன் (73) காலமானார். 1950 ஆம் ஆண்டு கோட்டயத்தில் பிறந்த இவர் இளம் வயதிலேயே தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். 23 வயதில் சிபிஐ இளைஞர் பிரிவு மாநில செயலாளர் ஆனார். 28 வயதில் மாநில தலைமை பொறுப்பிற்கு வந்தார். இந்த நிலையில் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்த இவர் உயிரிழந்தார். இவரது மறைவுக்கு அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்