இந்தியாவில் மக்கள் பலரும் தற்போது அதிக அளவு யுபிஐ சேவைகளை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு 21 வங்கிகளுடன் யுபிஐ முறையை என் சி பி ஐ தொடங்கியது. அதற்காக கூகுள் பே, போன் பே மற்றும் பேடிஎம் போன்ற பல செயலிகள் இயங்கி வருகின்றன. தற்போது அரசும் வங்கிகளும் பயனாளர்களின் வசதிகளை மேம்படுத்த யுபிஐ தொழில்நுட்பத்தில் பல மாற்றங்கள் மற்றும் மேம்பாடு ஆகியவற்றை செய்துள்ளனர்.

அதன்படி மருத்துவமனை மற்றும் கல்வி நிலையங்களில் யுபிஐ மூலமாக அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யலாம் என்று ரிசர்வ் வங்கி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு முன்னதாக ஒரு லட்சம் ரூபாய் வரை மட்டுமே பரிவர்த்தனை செய்ய வரம்பு இருந்த நிலையில் தற்போது 5 லட்சம் ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.