
திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, சோதனை சாவடியை தாண்டி கழிவுகள் எவ்வாறு வருகிறது? கேரளாவின் மருத்துவ கழிவுகள் கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் கொட்டப்படுகிறது. எங்களுடைய வளங்களை வெட்டி எடுத்துச் சென்று அவர்களின் குப்பைகளை இங்கே கொட்டுகின்றனர். கேரளா கடவுளின் தேசம் என்றால் தமிழகம் என்ன கண்றாவி தேசமா?
கழிவுகள் ஆபத்தானவை இல்லை என்றால் கேரளாவிலேயே கொட்ட வேண்டியது தானே? இதைக் கேட்டு தடுத்திருக்க வேண்டியது யார்? கழிப்பிடம், குடியிருக்கும் இடத்தை தவிர மீதமுள்ள அனைத்திற்கும் கருணாநிதி பெயர் தான் வைக்கப்பட்டு இருக்கிறது. வேறு தகுதி பெற்ற தலைவர் யாரும் இல்லையா? தமிழ்நாடு என்பதற்கு பதில் கருணாநிதி நாடு என்று மாற்றி விடலாம் என கூறியுள்ளார்.