
கேரளாவில் கடந்த சில நாட்களாகவே காலரா தொற்று அதிவேகமாக பரவி வருகின்றது. திருவனந்தபுரம் மாவட்டம் நொய்யாண்டின் கராவில் உள்ள சிறப்பு பள்ளி விடுதியில் அனு என்ற 26 வயது மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் காலரா நோய் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில வாரமாக அவருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு இருந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு காலரா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தொடர் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். காலரா தொற்றை கட்டுப்படுத்த அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.