நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் இன்று காலை உடல் நல குறைவு காரணமாக உயிரிழந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று காலை கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ் திரை உலகில் அரசியலில் பெரும் ஆளுமையாக இருந்த கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகுந்த மனவேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், தேமுதிக தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என எல் முருகன் தெரிவித்துள்ளார்