இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை பார்த்தபோது தனக்கு லகான் படத்தில் வரும் அமீர்கான் தான் நினைவுக்கு வந்ததாக சர்ஃபராஸ் கான் தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ரோகித் அண்ணாவுடன் விளையாடுவதை மிகவும் ரசித்தேன். அணியின் அனைத்து வீரர்களையும் சரிசமமாக நடத்துகிறார். லகான் படத்தில் அமீர்கான் அணியை கட்டமைத்ததை போல நிஜத்தில் அவர் வீரர்களை ஒருங்கிணைக்கிறார் என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.