வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. வருகிற சட்டமன்ற தேர்தலில் விஜயின் தமிழக வெற்றி கழகமும் போட்டியிட உள்ளது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உறுப்பினர்களை சேர்ப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளது.
அந்த வகையில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் இதுவரை 77.34 லட்சம் பேர் திமுகவில் இணைந்துள்ளதாக அந்த கட்சியின் தலைவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். தொண்டர்களையும் மக்களையும் அரவணைக்கும் பாதை மிகவும் தெளிவானது உறுதியானது. இதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என கூறிய முதல்வர் ஸ்டாலின் மக்களிடையே மதவாத பிரிவினையை உருவாக்க நினைப்பவர்களுக்கு தமிழ்நாட்டில் இடம் இல்லை என எதிர்க்கட்சியினரை விமர்சித்துள்ளார்.
