விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பட்டதாரி இளைஞர்கள், பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
திருத்தங்கலில் நேற்று (பிப்ரவரி 12) நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் முக்கிய நிர்வாகியுமான கே.டி. ராஜேந்திர பாலாஜி முன்னிலையில் இந்த இணைவுப் படலம் நடைபெற்றது. கட்சியில் இணைந்த இளைஞர்கள் அனைவருக்கும் ராஜேந்திர பாலாஜி அதிமுக கட்சித் துண்டுகளை அணிவித்து, மலர் கொடுத்து உற்சாகமாக வரவேற்றார்.
திமுக, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மற்றும் நாம் தமிழர் கட்சி (நாதக) உள்ளிட்ட பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி, இந்த இளைஞர்கள் அதிமுகவில் இணைந்துள்ளனர். ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான பட்டதாரி இளைஞர்கள் அதிமுகவில் இணைந்திருப்பது அப்பகுதி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், இளைஞர்களின் இந்த ஆதரவு அதிமுகவினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
