
மராட்டிய மாநிலத்தில் உள்ள மும்பையில் இருந்து நேற்று முன் தினம் இரவு மின்சார ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதில் ருதுஜா (28) என்ற பெண் பயணித்துள்ளார். இவர் ஐடி ஊழியர். இந்த ரயில் கர்ஜத் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் ருதுஜா படிக்கட்டில் நின்றார்.
ரயில் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவர் திடீரென தடுமாறி கீழே விழுந்துவிட்டார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் ரயில்வே காவல்துறையினர் உடனடியாக பெண்ணை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்து விட்டனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.