விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் நடந்து முடிந்தது. மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் விஜய் என்னவெல்லாம் பேசப்போகிறார் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது விஜய் தனது எழுச்சிமிக்க பேச்சால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனது அரசியல் கொள்கைகள் கோட்பாடுகள், மக்கள் நலன் என அனைத்தைப் பற்றியும் விளக்கமாக பேசினார். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான் விஜயின் கட்சி கொள்கைகளும் எங்களது கொள்கைகளும் எதிரானது. எனக்கு கூறினார் விஜய் பாதை வேறு என் பாதை வேறு. நான் ஒருத்தன் தான் திராவிடத்தை கொன்னு புதைக்கணும்னு வந்து இருக்கேன்.
என்னையும் கூட்டணிக்கு போனு சொல்லாதீங்க. என்ன பொறுத்த வரைக்கும் கூட்டணி என்பது தற்கொலைக்கு சமம். அதற்கு விஷம் குடித்துவிட்டு படுத்து விடலாம். கூட்டணி என்றால் தனித்துவத்தை இழந்து விடுவார்கள். உங்க கூட்டணி கட்சித் தலைவர் கோபித்துக் கொள்வார் என நினைத்தால் நீங்கள் என்ன பேசுவீர்கள்? நீங்கள் செய்கிற தவறுக்கு எல்லாம் நான் வக்காலத்து வாங்கி பேசனுமா..? முட்டுக் கொடுக்கணுமா? அதை ஏற்பீர்களா? நீங்கள் கூட்டணி வைத்தால் தான் கட்சியை காப்பாற்ற முடியும் என்கிறார்கள். கட்சியை காப்பாற்றுவது தான் லட்சியம் என்றால் இந்த லட்சியத்தை காப்பாற்ற கட்சியை ஆரம்பிச்சாங்க. எனக்கு அதில் உடன்பாடு இல்லை. கூட்டணி வைக்காமல் தனித்தே போட்டியிட்டு நான் தோற்றுப் போகிறேன். உங்களுக்கு என்ன இழப்பு என கேள்வி எழுப்பியுள்ளார்.
