தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று நடைபெற்ற நிலையில் அதிமுகவினர் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதில் கண்டனம் தெரிவிக்கும் விதமாக யார் அந்த சார் என்ற பேட்ஜ் அணிந்து வந்தனர். இந்த வழக்கில் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில் சார் என்ற ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இன்று ‌ யார் அந்த சார் என்று அதிமுகவினர் பதாகைகளுடன் முழக்கம் எழுப்பியதால் அவர்களை சபையை விட்டு வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆளுநர் ரவி அவையை  விட்டு வெளியேறவில்லை எனவும் அவரை வெளியேற்றி விட்டார்கள் என்று கூறினார். அதன் பிறகு கூட்டணி கட்சிகளுக்கு கூட போராட்டம் நடத்துவதற்கு திமுக அரசு அனுமதி கொடுப்பதில்லை. கூட்டணி கட்சிகளுக்கு இந்த நிலை என்றால் எதிர்க்கட்சிகளின் நிலைமையை நினைத்துப் பாருங்கள். ஒட்டுமொத்த இந்தியாவை யார் அந்த சார் என்று கூறி வருகிறது. நீதிமன்றம் தாமாக வந்து விசாரிக்கவில்லை. பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக திமுக தான் வழக்கு தொடர்ந்தது என்று கூறினார். மேலும் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போராட்டம் நடத்தும் எதிர்க்கட்சியினர் கைது செய்யப்படும் நிலையில் தற்போது எடப்பாடி பழனிச்சாமி இப்படி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.