மது விலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்திருக்கும் சூழலில், அவர் வகித்து வந்த பொறுப்புகள் பிரித்து நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர் முத்துசாமிக்கு கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஈரோட்டி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முத்துசாமி பேசியதாவது, டாஸ்மாக்கில் கூடுதல் நேரத்தில் மதுவிற்பனை நடைபெறுவதை தடுப்பது தமிழ்நாடு அரசின் கடமை ஆகும். கள்ளச் சாராயத்தை தடுக்க முதல்வர் ஸ்டாலின் கூட்டங்கள் நடத்தி ஆட்சியர்களுக்கும், காவல்துறைக்கும் வழிமுறைகள் வழங்கி உள்ளார். அரசின் எண்ணம் மது அருந்துபவர்களை குறைக்க வேண்டும் என்பதே ஆகும் என அவர் தெரிவித்துள்ளார்.