ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை காரணமாக பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், ஜெய்ப்பூரை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் ஆன்மிக சுற்றுலாவுக்குப் பின் வேனில் வீடு திரும்பி வந்துள்ளனர். அவர்களது வாகன டிரைவர், வழியைக் கண்டறிய கூகுள் மேப்பில் காட்டிய பாதையை நம்பிய நிலையில், வாகனத்தை மூடப்பட்டிருந்த சோமி-உப்ரிடா பாலத்துக்குள் கொண்டு சென்றார். உறங்கிக் கொண்டிருந்த குடும்பத்தினர் வேனுடன் கீழே பனாஸ் ஆற்றுக்குள் விழுந்தனர். இந்த விபத்தில் குழந்தை உட்பட நால்வர் உயிரிழந்தனர்.
மீதமிருந்த 5 பேர் உயிர் பிழைத்த நிலையில், அவர்களின் தகவலின் அடிப்படையில் போலீசார் விரைந்து வந்தனர். உடனே மீட்பு பணியில் ஈடுபட்ட போலீசார், ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நபர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதோடு, கூகுள் மேப்பில் தவறான தகவல் காட்டப்பட்டது இந்த பேரதிர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
