
தமிழ்நாட்டில் நாளை 3 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதாவது பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் திருவிழாவை முன்னிட்டு தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் நாளைய தினம் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. அதன்பிறகு புகழ்பெற்ற ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இதேபோன்று புகழ்பெற்ற நார்த்தமாலை முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் நாளை உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறையாக இருந்தாலும் பொது தேர்வுகள் நடைபெறுவதாக இருந்தால் அவை வழக்கம்போல் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.