நாடாளுமன்றத்தில் சமீபத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தங்கத்தின் மீது 6 சதவீதம் வரை சுங்க வரி குறைக்கப்பட்டது. இதனால் தொடர்ந்து தங்கம் விலை சரிந்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை ரூ.480 வரை குறைந்த நிலையில் இன்றும் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 15 ரூபாய் குறைந்து 6415 ரூபாய் ஆகவும், ஒரு சவரன் 120 குறைந்து ரூ‌.51,320 ரூபாயாகவும் இருக்கிறது. இதேபோன்று 18 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 12 ரூபாய் குறைந்து 5,255 ரூபாயாகவும, ஒரு சவரன் 96 ரூபாய் குறைந்து 42,040 ரூபாயாகவும் இருக்கிறது. மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் 89 ரூபாயாகவும் ஒரு கிலோ வெள்ளி 89 ஆயிரம் ரூபாயாகவும் இருக்கிறது.