மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு, செப்டம்பர் 5ஆம் தேதி வெள்ளிக்கிழமை அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வெள்ளி, சனி, ஞாயிறு என மூன்று தினங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர்ச்சியாக விடுமுறை அமையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில், விடுமுறையை பயனுள்ளதாக பயன்படுத்தி சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிடும் பொதுமக்களுக்கு வசதி ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மாநில போக்குவரத்துக் கழகம் (TNSTC) சார்பில் விரைவில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், செப்டம்பர் மாதத்தில் வார இறுதி தவிர வேறு முக்கிய விடுமுறை இல்லாததால், இந்த மூன்று நாட்களும் பயணத்திற்குப் பொருத்தமான வாய்ப்பாக கணிக்கப்படுகிறது.
