
சென்னை மாநகராட்சி திருவிக நகர் 65-வது வார்டு கவுன்சிலராக திமுக கட்சியின் கு. சாரதா என்பவர் இருக்கிறார். இவர் அந்த பகுதிகளில் புதிதாக வீடு கட்டுபவர்களிடம் மிரட்டி பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது. இது சார்பாக திமுக மேல் இடத்திற்கு அடிக்கடி புகார்கள் சென்ற நிலையில் தற்போது அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இது தொடர்பாக திமுக கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, கவுன்சிலர் சாரதா கட்டுப்பாட்டை மீறியும் அவதூறு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருவதாலும் திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் தற்காலிகமாக நீக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கனவே மாநகராட்சி அனைத்து ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் சாலையில் சுற்றி தெரியும் மாடுகளுக்கு ஆதரவாக சாரதா செயல்படுவதாக கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.