ஒடிசா மாநிலத்தில் உள்ள பாலசோர் மாவட்டத்தில் தர்மு பெஹ்ரா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் இருக்கின்றனர். முதல் மனைவிக்கும் அவருக்கும் இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இரண்டாவது மனைவிக்கு கடந்த 19-ஆம் தேதி மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் தர்மு பெஹ்ரா இடைத்தரகர்கள் மூலம் பிறந்து பத்து நாட்களை ஆன குழந்தையை விற்பனை செய்துள்ளார்.

அதன் பிறகு அந்த பணத்தை வைத்து புதிதாக பைக் வாங்கி குடும்பத்துடன் சொந்த கிராமத்தில் உலா வந்தார். இது பற்றி ஊர்மக்கள் குழந்தைகள் நல குழுவிடம் புகார் அளித்தனர். அவர்கள் விசாரணை நடத்திய போது குழந்தை விற்கப்பட்டது உறுதியானது. பின்னர் போலீசார் உதவியுடன் அந்த குழந்தை மீட்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தர்முவையும், அவருக்கு உடந்தையாக இருந்த இரண்டாவது மனைவியையும் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.