
கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுகிறது. கனடா நாட்டில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்திப் சிங் கொலை செய்யப்பட்டார். அதற்கும் இந்தியாவிற்கும் தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஆதாரம் இன்றி கூறினார். இரு தரப்பினருக்கும் இடையே சண்டை வந்ததால் இந்தியா தூதர்களை கூட திரும்ப பெற்றது. கனடா நாட்டைச் சேர்ந்த சாட் ஈரோஸ் என்பவர் இந்தியப் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, கனடா நாட்டில் உள்ள மகப்பேறு வார்டுகள் அனைத்தும் இந்திய பெண்களால் நிரம்பியுள்ளது என எனது உறவினர் ஒருவரிடம் செவிலியர் கூறியுள்ளார்.
கனடா மருத்துவமனைகள் யாருக்கும் சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பாது. அதன் காரணமாகவே வெளிநாட்டு இந்திய பெண்களை அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். வார்டுகள் இந்திய பெண்களால் நிரம்பியுள்ளது. அவர்கள் கனடா நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை. கனடாவில் பிறப்பதால் அந்த குழந்தை கனடா குடியுரிமை பெறுகிறது. அந்த குழந்தை வளர்ந்த பிறகு கனடாவிற்கு வருகிறது. சீக்கிரமே பெற்றோர்கள் உள்பட குடும்பத்தையே ஸ்பான்சர் செய்து கூட்டி வந்துவிடுகிறார்கள். இங்கேயே இருந்து விடுகிறார்கள் என கூறியுள்ளார். அந்த வீடியோவை பார்த்த பலரும் இந்தியர்களை குறி வைத்து ஆதாரம் இல்லாமல் சொல்வதை ஏற்க முடியாது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.