நாய்கள் மனிதனின் உண்மையான நண்பனாக இருப்பதற்கு எடுத்துக்காட்டாக வீடியோ ஒன்று சமீபத்தில் வைரலாகி வருகிறது.

ஒரு வீட்டில் லொபியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை பின்னால் இருந்து ஒருவர் கடத்த முயற்சித்த போது, அந்த வீட்டின் நாய் அந்த சிறுமியை காப்பாற்றும் எண்ணத்தில் குறைத்து, அவரை கடிக்க சென்றபோது, அவர் அங்கிருந்து தப்பித்துச் சென்ற சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் முழுமையாக பதிவாகியுள்ளது. ஆனால் இது முழுக்க ஒரு டிரெய்னிங் வீடியோ தான். நிஜமாக இப்படி ஒன்று நடந்தால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என நாய்க்கு பயிற்சி அளிக்கப்பட்டு அதை நாய் சிறப்பாக செய்துள்ளதாக நெட்டிசன்கள் இதுகுறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

நாய்கள் தங்களுக்கு பிடித்தவர்களை எப்படி பாதுகாக்கின்றன என்பதை இந்த வீடியோ காட்டுவதாக நெட்டிசன்கள் இது குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.