இன்றைய காலகட்டத்தில் சிறிய தலைவலி என்றால் கூட அனைவரும் மாத்திரை மருந்துகளை தேடுகின்றனர். தொட்டதற்கெல்லாம் மாத்திரை மருந்துகளை தேடக்கூடிய நாம் அதனை எடுத்துக் கொள்ளும் முன்பு சில விஷயங்களை தெரிந்து வைத்திருப்பது அவசியமாகும். அதன்படி சில மாத்திரைகளின் பின்புறம் சிவப்பு கோடு இருக்கும். இது முக்கியமான சில மாத்திரைகளில் மட்டுமே காணப்படுகிறது.
அதாவது இந்த மாத்திரைகளை பயன்படுத்த மருத்துவரின் ஆலோசனையை கட்டாயம் பெற வேண்டும். இந்த மருந்தை உரிய ஆலோசனை இல்லாமல் உட்கொள்வது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும். அதனால் இனி நாம் வாங்கும் மாத்திரைகளின் காலாவதி தேதியுடன் சிவப்பு கோடு இருப்பதையும் கவனிக்க வேண்டும்.
