
பொதுவாகவே குழந்தைகளுக்கு உடல்நிலை சரி இல்லை என்றால் மருந்து கடைகளில் டானிக் வாங்கி பெற்றோர்கள் கொடுக்கின்றனர். குறிப்பாக பெற்றோர்கள் பலரும் தங்கள் குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுக்கின்றனர். ஆனால் இந்த மருந்துகளில் நச்சுப் பொருட்கள் அதிகம் உள்ளதாக மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு சமீபத்தில் தெரிவித்துள்ளது. பல நிறுவனங்களின் இருமல் மருந்துகள் தர சோதனையில் தோல்வி அடைந்துள்ளது.
டைதிலீன் கிளைகோல், PEHB மற்றும் எத்தில் கிளைகோல் ஆகியவை சரியான வரம்புகளுக்குள் இல்லை. மொத்தம் 7,087 மருந்துகள் சோதனை செய்யப்பட்டன. 353 மருந்துகள் சோதனையில் தோல்வியடைந்தன என தெரிவித்துள்ளது. எனவே மருத்துவரிடம் பரிந்துரைத்த பிறகு குழந்தைகளுக்கு இருமல் மருந்து கொடுப்பது நல்லது.